வாக்காளர் அடையாள அட்டையில் சன்னி லியோன்: அதிர்ச்சியடைந்த இளம்பெண்

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரப்பிரதேசத்தல் இளம்பெண் ஒருவரின் அடையாள அட்டையில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், வாக்காளர்கள் பலரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்க வேண்டிய இடத்தில், மான், புலி போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்துள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

முன்னாள் மாநில அமைச்சர் நாரத் ராய் புகைப்படத்திற்கு பதிலாக யானையின் புகைப்படமும், அன்குர் சிங் என்ற இளைஞரின் புகைப்படத்திற்கு பதிலாக மான் புகைப்படமும் இடம்பெற்றிருந்துள்ளது. இது ஒரு புறமிருக்க பாலியா மாவட்டத்தை சேர்ந்த துர்காவதி என்ற பெண்ணின் புகைப்படத்திற்கு பதிலாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றிருந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாவட்டத்தின் மூத்த அதிகாரி Manoj Kumar Singhal தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாவட்டத்தின் தரவு பதிவேடு ஆபரேட்டர் விஷ்ணு தேவ் வர்மா கூறுகையில், கடந்த 15-ம் தேதியன்று 7 முதல் 8 வாக்காளர்களின் அடையாள அட்டை புகைப்படங்கள் சேதமடைந்து இருந்தன. அதனை சரி செய்யும் விதமாக, தற்காலிக புகைப்படங்களாகவே விலங்குகள் மற்றும் பறவைகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்