வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்காக களத்தில் இறங்கிய பிரபல தமிழ் நடிகர்! வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா

பிரபல தமிழ்நடிகரான அருண் விஜய் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நிவாரணப் பொருட்களை மற்றவர்களுடன் சேர்ந்து லாரியில் ஏற்றியது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது மெல்ல மெல்ல வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் கேரளாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர். அதிலும் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் கொடுத்த நிதியுதவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவரைத் தொடர்ந்து மற்றொரு முக்கிய நடிகரான அஜித் கேரள மக்களுக்கு உதவி செய்தாரா?இல்லையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தன் தங்கை மற்றும் சகோதரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்புவதில் தன்னுடைய பங்கும் இருந்ததை நினைத்து மகிழ்ச்சி மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அருண்விஜயின் இந்த செயலைக் கண்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers