கேரளாவில் கனமழையோடு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என தகவல்: பயத்தில் மக்கள்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்த கேரளா மெல்ல அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

வெள்ளம் காரணமாக வீடுகள் நீரில் மூழ்கிய நிலையில் பலர் நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டனர்.

தற்போது பலரும் தங்களுக்கு வீடுகளுக்கு திரும்பிவருகிறார்கள்.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் கேரளாவின் முக்கிய பகுதிகளில் கனமழை பொழியக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வரும் திங்கட்கிழமையன்று கோட்டயம், எர்ணாக்குளம், திருசூர் மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் என்றும் செவ்வாய்க்கிழமை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூரில் கனமழை பொழிக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்கள் பீதியடைய தேவையில்லை என கேரள பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் யாரும் பயணிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்