வெள்ளத்திலிருந்து மீளாத கேரளா: இன்று ஓணம் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

கேரள மக்கள் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அங்கு கருப்பு ஓணம் நடைபெற்று வருகிறது.

ஓணம் என்றாலே கேரள மக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம் என்ற நிலையில் 10 நாட்களும் மாநிலமே களைகட்டும்.

வீட்டு வாசலில் அத்திப்பூ கோலம், புத்தாடை, அறுசுவை உணவுகள், விருந்துக்கு பிறகு ஒரே ஆட்டம் பாட்டம் என ஓணம் கலைக்கட்டும்.

ஆனால் மழை வெள்ளம் காரணமாக கேரளா ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் இதில் எதையுமே அங்கு தற்போது காணமுடியவில்லை.

வெள்ளத்தில் மாயமான பலரை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. வீடு, வாசல் என எல்லாமே ஆட்டம் கண்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் சேறும், சகதியுமாக கிடக்கிறது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களால் அல்லது சொந்த பந்தங்களை இழந்தவர்களால் ஓணத்தை வரவேற்று கொண்டாட முடியவில்லை.

பூக்கள் இன்றி, கோலங்கள் இன்றி, அலங்கார விளக்குகள் இன்றி களையிழந்து உள்ளது இன்றைய ஓணம்

கேரள முதல்வதரே, இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்