தனியாக இருக்கும் பெண்களையே குறிவைத்தோம்: இளைஞர்களின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

பெண்களை மட்டுமே குறி வைத்து திருடும் பிரபல வழிப்பறிக் கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

இது குறித்து பொலிசாருக்கு பல புகார்கள் வந்தன.

இந்நிலையில் வேளச்சேரி- தாம்பரம் பிரதான சாலையில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் பெயர் கெளதம் மற்றும் பிரபு என தெரியவந்ததோடு, தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்துத் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பிரபு மற்றும் கெளதம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைப்போம்.

ஆள் இல்லாத சமயத்தில் தான் செயின், செல்போன்களை கத்தி முனையில் பறிப்போம்,

தினமும் ஒன்று அல்லது இரண்டு பேரிடம் கைவரிசைக் காட்டுவோம். அந்தப்பணத்தில் தினமும் ஜாலியாகவும் சொகுசாகவும் வாழ்வோம் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers