வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்த முதல்வர்! ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் இவ்வளவு தொகையா?

Report Print Santhan in இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களின் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் பத்தாயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிற்கு செல்லத் துவங்கியுள்ளனர்.

அதில் வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் விவரங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும்படி முதல்வர் பினராயில் விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கேரள அரசின் இணையதளத்தின் மூலம், விண்ணப்பித்து அதில் சேத விவரங்களை இணைக்கும்படி அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே வெள்ளதால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் வங்கிகணக்கிலும் தலா ரூ.10,000 செலுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers