வெள்ளத்தினால் ஏற்பட்ட சேத பாதிப்பில் இருந்து கேரளா மீள்வதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? வெளியான தகவல்

Report Print Kabilan in இந்தியா

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கான செலவினம் தோராயமாக ரூ.35 ஆயிரம் கோடி என அம்மாநில நிதித்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மற்றும் சேதம் குறித்து மாநில அரசு அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை கனமழையால் சேதமான சாலைகள், பாலங்கள் மற்றும் அவற்றின் சேதமதிப்பு குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.4,500 கோடி செலவாகும் என்றும், மின்சார கட்டமைப்பை சீரமைக்க ரூ.750 கோடி தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 786 குடிநீர் ஆதாரங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால், குடிநீர் திட்டங்களுக்கு ரூ.900 கோடி தேவைப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் வெள்ளம் ஏற்படுத்திய சேதத்தில் இருந்து மீள்வதற்கு, சுமார் ரூ.35 ஆயிரம் கோடி ஆகும் என நிதித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், வருடாந்திர திட்ட மதிப்பீட்டின்படி 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய திட்ட மதிப்பீடு ரூ.29, 150 கோடி என்றும், இதில் மற்ற செலவினங்களையும் சேர்த்தால் ஆண்டு செலவினம் ரூ.37,273 கோடி ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொச்சி விமான நிலைய சீரமைப்புக்கான அறிக்கை தயாராகவில்லை. அந்த அறிக்கை வெளியானால் சேத மதிப்பு மேலும் உயரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்