ஐக்கிய நாடுகள் கொண்டாடிய தமிழன் தான் விஜயகாந்த்! இது தெரியுமா உங்களுக்கு?

Report Print Kabilan in இந்தியா

தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த், இந்தியாவின் மனித நேயத்திற்கான சிறந்த இந்திய குடிமகன் விருதினை கடந்த 2001ஆம் ஆண்டு பெற்றார்.

நடிகர் மற்றும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர்களில் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

ஆனால், இவரது உதவிகள் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு சென்றடைந்ததால், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டார்.

குறிப்பாக குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும், ஒரிசா புயலால் பாதிக்கப்பட்ட போதும் விஜயகாந்த் ஏராளமான உதவிகளை அந்த மாநிலங்களுக்கு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 2001ஆம் ஆண்டு விஜயகாந்தின் சேவை மனப்பான்மை, உதவும் குணம் ஆகியவற்றை பாராட்டி இந்தியாவின் மனிதநேயத்துக்கான ‘சிறந்த இந்திய குடிமகன்’ விருதினை இந்திய அரசு வழங்கியது.

டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம் சார்பில் விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது விஜயகாந்த் கூறுகையில்,

‘தமிழ் தவிர வேறு மொழி எனக்கு தெரியாது. இந்நிலையில் டெல்லியில் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சம் இருந்தது. இங்கு நீங்கள் எல்லாம் தமிழ் உணர்வோடு ஒரு தமிழனை வரவேற்று உபசரித்ததைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனேன்’ என தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...