கேரளா வெள்ளக்காடானதற்கு இதுதான் காரணம்... பேரழிவு தொடரலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரள வெள்ளத்தை கருத்தில் கொண்டு பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த அடைமழையால், ஏறக்குறைய 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரள வெள்ள பாதிப்பை வைத்து வானிலை மாற்ற ஆய்வு வல்லுநர்கள் பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

1950 - 2017 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பெய்யும் கனமழையின் அளவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் 69,000 பேர் பலியாகியுள்ளனர்.

1.7 கோடி பேரின் வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது என மும்பையில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராக்சி மேத்யூ கால் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

வானிலை மாற்றப் பாதிப்புகளை பற்றி ஆய்வு செய்துவரும் ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி கிரா வின்க், புவி வெப்பமயமாதலின் விளைவாகவே கேரளாவில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்.

மேலும், புவி வெப்பநிலை 1 டிகிரி செல்ஷியஸ் கூடியதன் விளைவுதான் இவ்வளவும். மாசுபாடு அதிகரித்துக்கொண்டே இருந்தால், விளைவு மேலும் ஆபத்தாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் புவி வெப்பம் 1.5 டிகிரி செல்ஷியஸ் முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் ஆய்வுகள் கணிக்கின்றன.

மட்டுமின்றி 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜி.டி.பி.யில் 2.8% இழப்பைச் சந்திக்கவும் நாட்டு மக்களில் பாதி பேரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கவும் புவி வெப்பமாதல் காரணமாக இருக்கும் என உலக வங்கி தெரிவிக்கிறது.

இதனால்தான், பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உலக வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியஸ்க்குக் கீழே குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...