அவர்கள் குடித்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம்: அமைச்சரின் பேச்சால் எழுந்த சர்ச்சை

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் சாமானியர்கள் குடித்தால் தான் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என வணிக வரித்துறை அமைச்சர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சின்னமூக்கனூரில் பள்ளி திறப்பு விழா நடந்தது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார்.

அப்போது முதியவர் ஒருவர் மது போதையில் வந்து ரகளை செய்துள்ளார். பொலிசார் அவரை வெளியேற்றிய பிறகு அமைச்சர் தனது பேச்சை தொடங்கினார்.

அவர் கூறுகையில், ‘டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்கு தான் வருகிறது. அதில் இருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

அவரை நான் குடிக்க வேண்டாம் என்று கூறினால் இந்த பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும்’ என தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...