ஸ்டாலின் கன்னத்தில் முத்தமிட்ட கனிமொழி

Report Print Deepthi Deepthi in இந்தியா

திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள்(28 ஆம் திகதி) நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, துரை முருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தார் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக மகளிர் அணித்தலைவியும், ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி, ஸ்டாலினின் கன்னத்தில் முத்தமிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்