கடல் கடந்து வந்து தமிழ் மாப்பிளையை கரம்பிடித்த ஜேர்மனி மணமகள்!

Report Print Arbin Arbin in இந்தியா

ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு திண்டுக்கலில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தின் திண்டுக்கலை சேர்ந்த நவீன் சேகரன், ஜேர்மனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அந்த நாட்டை சேர்ந்த தெரசா ஹாபர்ள் என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.

இதைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, திண்டுகல்லில் அவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. தமிழக பராம்பரிய முறைப்படி நடந்த திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை, தாய், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் பங்கேற்ற ஜேர்மனி நாட்டினர் தமிழக பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலைகளை அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers