வெளிநாட்டில் தந்தை...இறந்துபோன தாய்க்கு அருகில் இரவு முழுவதும் பசிக்காக அழுத குழந்தை! உறைய வைக்கும் சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணின் கொலை வழக்கில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் நேரு என்பவரின் மனைவி லாவண்யா தனது ஒரு வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். தனியாக இருக்கும் காரணத்தால், பாதுகாப்பு கருதி லாவண்யா, தனது தாய் வீட்டில் இருந்தார். அவ்வப்போது, கணவரின் ஊரிலும் இருப்பதுண்டு.

இந்நிலையில், உறவினர் ஒருவரின் விசேஷ நிகழ்ச்சிக்காக தனது கணவரின் கிராமத்துக்கு சென்ற லாவண்யா அங்கு தனியாக இருந்துள்ளார். பெரும்பாலும் வீட்டின் கதவை பூட்டி வைத்திருக்கும் லாவண்யான விடிந்தும் வெளியே வரவில்லை.

அது வயல் பகுதிகள் நிறைந்த இடம் ஆகும். ஆனால் ஒரு வயது மகன் மட்டும் தனியாக வெளியே நின்று அழுதுகொண்டிருந்துள்ளான். இதனால் அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது லாவண்யா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு, பொருள்கள் கலைந்தநிலையில் கிடந்தன. நகைகள் இருந்த டப்பாக்கள் சிதறிக்கிடந்தன.

இதனைத்தொடர்ந்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல், பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில், லாவண்யா நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்படுவதற்கு முன்னர், லாவண்யா தனது குழந்தையுடன் சாப்பிடுவதற்கு தட்டில் சாதம் எடுத்து வைத்துள்ளார்.

குழந்தை சாப்பிடாமல் உணவு அப்படியே இருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், லாவண்யாவை தாக்கிவிட்டு வீட்டிலிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம்.

இந்தத் தாக்குதலில், லாவண்யாவுக்கு தலையிலும், நெஞ்சிலும் கத்திக்குத்துக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தாய் கொல்லப்பட்டது தெரியாமல், இரவு முழுவதும் ரத்தவெள்ளத்தில் கிடந்த லாவண்யாவின் அருகில் குழந்தை படுத்துக்கிடந்துள்ளது.

பசியில் உணவுக்காகத் தாயை அழைத்துக் கதறியது, அப்பகுதி மக்களை உறையவைத்துள்ளது. தற்போது, மோப்ப நாய் வைத்து குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers