நண்பனின் மனைவியுடன் வேறு பழக்கம்: சினிமா பாணியில் காட்டுக்குள் நடந்த கொலை சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுரை மாவட்டத்தில் கூடாத உறவு விவகாரத்தில் கண்டித்தும் கேட்காத காரணத்தால் நண்பனை கொலை செய்தோம் என குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மணிகண்டன் என்பவர் டீக்கடையில் பணியாற்றி வருகிறார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத காரணத்தால் இவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால், இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மணிகண்டனின் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த பட்டியலை பொலிசார் சேகரித்தனர். இதில் கடைசியாக பேசிய சீனிவாசன் என்பவரை பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சீனிவாசன் அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னுடைய நண்பர் சரவணன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். சரவணனுடைய மனைவி வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனையும், வனிதாவையும் சரவணன் கண்டித்தார். இருப்பினும் அவர்களது தொடர்பு நீடித்தது.

இதனால், வருத்தமடைந்த சரவணன், மணிகண்டனை கொலை செய்வதற்கு என்னிடம் உதவி கோரினார்.

நான் என்னுடைய நண்பர்களான மதுரை கீரைத்துரையை சேர்ந்த சபரி, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் ஆகியோரிடம் இதனை தெரிவித்தேன். அவர்கள் இருவரின் உதவியோடு மணிகண்டனை கொலை செய்ய நானும், சரவணனும் முடிவு செய்தோம். அதற்கான திட்டங்களை தீட்டினோம்.

கொடைக்கானலுக்கு ஜாலியாக சென்று வரலாம் என்று மணிகண்டனை அழைத்தோம். இதனை மறுக்காத மணிகண்டன் எங்களுடன் வந்தார்

குறிப்பிட்ட தூரம் வரை காரில் சென்ற நாங்கள், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்றோம். திடீரென நாங்கள் 4 பேரும் சேர்ந்து மணிகண்டனின் வாயை பொத்தி கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தோம். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக 1,500 அடி பள்ளத்துக்குள் உடலை வீசி விட்டோம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை பொலிசார் தேடி வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் - வசந்தா தம்பதியினர் மகன் 34 வயதுடைய மணிகண்டன். திருமணம் ஆகாத இவர் டீக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 23ஆம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இவரது தாயார் வசந்தா பல இடங்களில் மணிகண்டனை தேடியும் அவரைப் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.

ணிகண்டனின் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்தனர். குறிப்பாக மணிகண்டன் காணாமல் போன அன்று யாருடன் பேசினார் என்பதையும் ஆய்வு செய்தபோது, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார்புரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கூடாநட்பு விவகாரத்தில்தான் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

கைதான சீனிவாசன், என்னுடைய நண்பர் சரவணன். மதுரை நேரு நகரை சேர்ந்த அவர், ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் தனக்கு தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். சரவணனுடைய மனைவி வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனையும், வனிதாவையும் சரவணன் கண்டித்தார். இருப்பினும் அவர்களது தொடர்பு நீடித்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்