வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்! தற்கொலை செய்கிறேன் என கூறிய மனைவி: நடந்த துயரச்சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண், வரதட்சனை கொடுமை தாங்க முடியாதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி Arunadevi-KV Perumalla. இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் நடைபெற்று முடிந்த மூன்று மாதங்களுக்குள்ளே அருணா தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாப்பிள்ளை குடும்பத்தினர் தொடர்ந்து வரதட்சனை கேட்டு என் மகளை தொல்லை செய்ததன் காரணமாகவே அவள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்று, அருணாதேவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், அருணா தேவியின் செல்போன் அழைப்புகள் போன்றவைகள் குறித்த ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

மேலும் சம்பவ தினத்தன்று அருணா தேவி தன்னுடைய கணவருக்கு போனில் அழைத்துள்ளார் அவர் எடுக்காததைத் தொடர்ந்து, வீடியோ கால் செய்துள்ளார்.

அப்போதும் அவர் வரதட்சனை பற்றியே பேசியதால், மனமுடைந்த அருணா தேவி அவரிடம் நான் தற்கொலை செய்கிறேன் என்று கூற, உடனடியாக பெருமல்லா அவரின் பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்துள்ளார்.

பெற்றோர் அவரின் அறையை திறந்து பார்த்த போது, அருணா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அருணாதேவியின் கணவர் பெருமல்லா திருமணம் முடிந்த ஒரு மாதத்திலே தான் பணி புரியும் பிரான்சிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் அதன் பின் போனில் தொடர்ந்து அருணா தேவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார்.

மேலும் கணவன் தனக்கு கொடுத்த டார்ச்சர்களை அருணாதேவி பெற்றோரிடம் சொல்லாமல் சில நாட்கள் மறைத்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னரே பெற்றோருக்கு தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers