அவருக்கும், அபிராமிக்கும் இப்படி ஒரு உறவு இருப்பது எனக்கு தெரியாது: ஏமாந்துவிட்டேன் என கலங்கிய சுந்தரத்தின் மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

கள்ளக்காதல் விவகாரத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்த அபிராமி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது குற்றவாளியான கள்ளக்காதலன் சுந்தரமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அபிராமியின் குடும்ப வாழ்க்கை சீழிந்துபோனது மட்டுமல்லாமல், கள்ளக்காதலன் சுந்தரத்தின் குடும்பமும் சீரழிந்துவிட்டது.

அராமியின் கள்ளக்காதலன் சுந்தரத்தின் மனைவி முத்துலெட்சுமி கூறுகையில், எங்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, அம்மயபுரம் பூண்டி பகுதியாகும்.

நானும் சுந்தரமும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். சென்னை குன்றத்தூர் கெங்கையம்மன் கோயில் தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறோம். கடந்த இரண்டு மாதமாகத்தான் எனக்கு அபிராமியை தெரியும்.

அவள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவாள். எனது கணவனிடம் நான் கேட்ட பொழுது, எனது குடும்ப நண்பர் என்று கூறி என்னை சமாளித்தார். நானும் அதனை உண்மை என்று நம்பினேன்.

ஆனால் அவர்களுக்குள் இப்படி ஒரு கள்ளத்தொடர்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எனது கணவனை முழுமையாக நம்பி, எனது பெற்றோரைக் கூட விட்டுப் பிரிந்து அவர் பின்னாலேயே சென்னை வந்த எனக்கு, இன்று எனது காதல் கணவர் நல்ல பரிசு கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers