காப்பகத்தில் சிறுமிக்கு நடந்த கொடூரம் என்ன? திகிலுடன் விவரித்த சிறுவன்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் பாலியல் புகாரில் சிக்கிய சிறுவர் இல்லத்தில் ஒரு சிறுமி கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக நேரில் பார்த்த சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமுல்லைவாயிலில் உள்ள சிறுவர் இல்லத்தில் சிறுவர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அந்த இல்லம் மூடப்பட்டது.

விமலா ஜேக்கப் என்பவர் நடத்தி வந்த அந்த சிறுவர் இல்லத்தில் எலெக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்த பாஸ்கர், முத்து, மற்றும் வார்டனாக இருந்த சாமுவேல் ஆகியோர் பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

இங்கு தங்கியிருந்த 48 ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் அந்த சிறுவர் இல்லத்தில் சிறுமி ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டுள்ளதாக சிறுவன் ஒருவன் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட சிறுவர் இல்லத்துக்கு வாக்குமூலம் அளித்த சிறுவனை அழைத்துச்சென்று சம்பவம் தொடர்பாக கேட்டறிய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்

சிறுவர் இல்லத்தில் சர்ச்சைக்குரிய அந்த இடத்தை தோண்டினால் இன்னும் பல அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers