குறித்த முகூர்த்தத்தில் திருமணம் நடக்கும்: 23 வயது பெண்ணை மணக்க முயன்ற 43 வயது நபர் அதிரடி!

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் பவானி சங்கர் தொகுதியின் எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கு நிச்சயித்த பெண் மாயமாகிவிட்ட போதிலும், ஏற்கனவே குறித்த அதே முகூர்த்தத்தில் தனது திருமணம் நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

43 வயதான ஈஸ்வரனுக்கு சந்தியா என்ற 23 வயது பெண்ணை பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

12-ந் திகதி திருமணம் நடக்கவிருந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இதில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில் சந்தியா கடந்த 1-ம் திகதி மாயமானார்.

பின்னர் சந்தியாவின் தாயார் பொலிசிடம் தன் மகளை காணவில்லை என்றும், அவர் ஒருவரைக் காதலித்து வந்ததால், அவர் மீது தனக்கு சந்தேகமாக இருப்பதாகவும் புகாரளித்தார்.

இந்நிலையில், ஏற்கனவே குறித்த திகதியில் திருமணத்தை நடத்த ஈஸ்வரன் தரப்பில் ஏற்பாடுகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டது. ஈஸ்வரனுக்கு அவரது சமூகத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை பார்க்க தொடங்கினர்.

அதன்படி சத்தியமங்கலத்திலேயே பெண்ணையும் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளனர். அதனால் ஏற்கனவே குறித்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும் என்று ஈஸ்வரன் உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers