நானும் அரசியல்வாதி தான்! தமிழ்ப்பெண் சோபியாவுக்கு ஆதரவாக கர்ஜித்த நடிகர் கமல்ஹாசன்

Report Print Raju Raju in இந்தியா

பா.ஜ.க அரசை விமர்சனம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வந்த நிலையில், அங்கிருந்த சோபியா என்ற இளம்பெண் பாசிசி பா.ஜ.க ஆட்சி ஒழிக என கோஷமிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நடந்த வாக்குவாதத்தில் சோபியா கைது செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சோபியாவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்துவரும் நேரத்தில் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?

நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers