ஒரு தலை காதல்: பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளைஞர்.. அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் ஒரு தலையாக காதலித்த பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளைஞர் பின்னர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் (28) என்பவர் இளம் பெண் ஒருவருடன் நட்பான நிலையில் அவரை காதலிக்க தொடங்கினார்.

ஆனால் அப்பெண் ரமேஷை காதலிக்கவில்லை. இந்திலையில் அந்த பெண்ணுக்கு இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அப்போது திருமண மண்டபத்துக்கு வந்த ரமேஷ், அங்கிருந்த மணமகன் ரகுவிடம், உங்கள் வருங்கால மனைவியும் தானும் காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ந்த ரகு திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதன்பின்னர் மணப்பெண்ணின் குடும்பத்தார் ரமேஷ் மீது பொலிசில் புகார் அளித்த நிலையில் ரமேஷை பொலிசார் விசாரித்து அனுப்பினார்கள்.

இந்நிலையில் திடீரென மனமுடைந்த ரமேஷ் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னால் அவர் எழுதிய கடிதத்தில், அந்த பெண்ணையே நீங்கள் தயவுசெய்து திருமணம் செய்ய வேண்டும் ரகு என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers