என் தந்தை வயது நபரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன்? 23 வயது மணமகளின் மனக்குமுறல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்துகொள்வேன் என 23 வயது மணமகள் சந்தியா நீதிபதியிடம் கண்ணீர் மல்க குமுறியுள்ளார்.

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன். இவருக்கும் கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து வரும் 12ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், இந்த திருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இந்நிலையில், மணமகள் சந்தியா கண்டுபிடிக்கப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள்.

எனக்கும் நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் 20வயது வித்தியாசம் உள்ளது. அவருக்கு வயது 43. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறினார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி பாரதி பிரபா, சந்தியாவிடம், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது, நான் பெற்றோரிடமே செல்கிறேன் என சந்தியா கூறியுள்ளார்.

இதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தார்.

எம்எல்ஏவுக்கு 43 வயதாகியும் இப்போதுதான் திருமண ஆசை வந்துள்ளது. ஆனால், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்த அவருக்கு இது அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers