குழந்தைகளை கொலை செய்த அபிராமி சிறைச்சாலையில் எப்படி இருக்கிறார் தெரியுமா? வெளியான தகவல்கள்

Report Print Santhan in இந்தியா
3593Shares
3593Shares
lankasrimarket.com

தமிழகத்தில் காதலனுக்காக குழந்தைகளை கொலை செய்த அபிராமி சென்னை புழல் சிறையில் எப்படி இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை குன்றத்தூரில் கள்ளக்காதலால் தான் பெற்ற இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற அபிராமியை தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 மாதமாக பிரியாணி கடைக்காரரான சுந்தரத்துடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த அபிராமிக்கு, கள்ளக்காதல் மோகம் அதிகமாகவே, தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கணவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் ஓடி போக அபிராமி முடிவு செய்திருந்தார்.

பாலில் விஷம் கலந்து குழந்திகைளை கொன்று விட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவர் தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் இழந்து வாடி வருகிறார்

இந்நிலையில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி எப்படி உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதில், அபிராமி, சரியாக உணவு சாப்பிடுவது இல்லையாம், எப்போதும் சோகமாகவே முகத்தை வைத்துக் கொண்டு உள்ளாராம்.

யாருடனும் பேசாமல், கண்ணீர் கலங்கியபடி உள்ளாராம்.

சக பெண் கைதிகள் இவரிடம் பேச வந்தாலும், அவர்கள் யாருடனும் பேசாமல் அமைதியாக தனிமையில் அழுதுக்கொண்டே உள்ளாராம்.

அதையும் மீறி, ஒரு சில பெண் கைதிகள், அபிராமியிடம் பேச வந்தாலும் அவர்களை பார்க்க கூட மாட்டேன்றாராம்.

இப்படி இருக்கும் போது, சில சமயத்தில் ஆவேசத்துடன் கண்கள் சிவந்து, கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறதாம்.

பெற்ற பிள்ளைகளை கொன்ற அவருக்கு, குழந்தைகளை இழந்துவிட்டோமே என நினைத்து அழுகிறாரா அல்லது சுந்தரத்துடன் திட்டமிட்டபடி சேர்ந்து வாழ முடியவில்லையே என கோபத்தில் இருக்கிறரா என்பதை கூட புரிந்துக்கொள்ள முடியாத அளவில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்