17 வயது மகளின் குழந்தைக்கு அப்பாவான நபருக்கு இரட்டை ஆயுள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ஒசூரில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சர்மா என்பவர் தனது 17 வயது மகளை 2015 ஆம் ஆண்டு முதல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இதனால், மூத்த மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது.

ராஜேஷ் சர்மாவின் மனைவிக்கு சந்தேகம் வலுத்ததால் மகளிடம் விசாரித்துள்ளார். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு அப்பாதான் காரணம் என மகள் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த தகவலின்படி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, ராஜேஷ் சர்மாவை பொலிசார் கைது செய்தனர்.

பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ராஜேஷ் சர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers