ரத்தக்கறையை தண்ணீரில் கழுவினேன்: இளம்பெண்ணை கொன்ற இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

இளம்பெண்ணை நகைக்காக கொலை செய்த இளைஞர் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் லதா (27).

நேற்று முன்தினம் லதா தனது விவசாய நிலத்துக்கு சென்ற போது அங்கு வந்த சிலர் லதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்ததோடு அவர் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்னர் லதா ஒரு பேப்பரில் தன்னிடம் நகைகளை பறித்தவர்கள் பற்றிய விவரங்களை எழுதி கொடுத்தார்.

இதை வைத்து பொலிசார் ராமச்சந்திரன் (23) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்ததையும், அவரது கழுத்தை அறுத்ததையும் ஒப்புக் கொண்டார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், லதா வயலில் இருக்கும் போது நானும், மேலும் இருவரும் அங்கு சென்றோம்.

லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்ற போது அவர் எங்களை கடுமையாக திட்டினார்.

பின்னர் லதாவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, தாலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டோம்.

இந்த சம்பவத்தால் என் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக கையில் உள்ள ரத்தக்கரையை தண்ணீரால் கழுவினேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்த கொலையில் தொடர்புள்ள சக்திவேல் என்பவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.

அவர் பிடிப்பட்டால் தான் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers