நோய் சிகிச்சைக்கு கூட பணமில்லை: பரிதாபமாக உயிரிழந்த பிரபல தமிழ் நடிகர்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல மூத்த திரைப்பட நடிகர் வெள்ளை சுப்பையா உடல் நலக்குறைவால் தனது 80-வது வயதில் காலமானார்.

வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், அமைதிப்படை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா.

இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு மட்டுமல்லாது 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தவர்.

சில காலமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. பரிசோதனைக்கு பின்னர் அது புற்றுநோய் கட்டி என தெரியவந்தது

ஆனால் சிகிச்சைக்கு கையில் பணம் இல்லாமல் அவதிப்பட்டார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதியுற்ற நிலையில் சுப்பையா காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers