அவருடன் வீடியோவில் பேசுகையில் குழந்தைகள் குறுக்கிட்டால் சைக்கோவாக மாறிய அபிராமி: வெளியான புதிய தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் செல்போனை பொலிசார் ஆராய்ந்த போது அவர் ‘டப்ஸ்மாஸ்’ அடிமை என தெரியவந்தது.

அவர் தனது கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் நீண்ட நேரம் பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியை ‘டப்ஸ்மாஸ்’ ஆக மாற்றி தனது செல்போனில் சேமித்து வைத்து இருக்கிறார்.

இதே போல் குழந்தைகளையும் பேச வைத்து இருக்கிறாள். இதில் குழந்தைகளும் அடிமைகளாகி தாய் பேசும் போது அவர்களும் குறுக்கே புகுந்து இடையூறு செய்து இருக்கிறார்கள்.

இதனால் எரிச்சல் அடைந்து அபிராமி தனது குழந்தைகளை சத்தம் போட்டு மிரட்டியுள்ளார். பல சமயம் பக்கத்து வீடுகளுக்கு கேட்கும் அளவுக்கு அவள் குழந்தைகளை சைக்கோ போல் கோபத்தின் எல்லைக்கே சென்று அடித்து அழ வைத்திருக்கிறார்.

குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அபிராமிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, அபிராமி தனது காதலனுடன் வீடியோகால் மூலம் அடிக்கடி பேசியிருக்கிறார். அதை அவர் தனது செல்போனில் பதிவு செய்தும் வைத்து இருக்கிறார்.

கணவர் வேலைக்கு சென்றபின் அவர் எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பது தெரிய வந்தது.

அவர் கள்ளக்காதலனுடன் வீடியோவில் பேசும் போது, குழந்தைகள் குறுக்கிட்டால் அவர்களை கடுமையாக தாக்குவாள். அந்த அளவுக்கு கள்ளக்காதல் அவரை மாற்றி இருக்கிறது. ஒருமுறை குழந்தைகளை அவர் அடிப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசிலும் புகார் செய்திருக்கிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers