கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற அவலம்.. பின்னர் நடந்த சம்பவம்: வெளியான வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், கர்ப்பிணிப் பெண்ணொருவரை தொட்டில் கட்டி தூக்கிச் சென்றது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசியாநகரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு முறையான போக்குவரத்து வசதி இல்லை.

இதனால் தொட்டில் ஒன்று கட்டி, சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பெண்ணின் உறவினர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி மூங்கில் குச்சிகள், கயிறுகள் மற்றும் துணியைக் கொண்டு தொட்டில் உருவாக்கப்பட்டது. அந்த தொட்டிலில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றி அவரது உறவினர்கள் தூக்கிச் சென்றனர்.

சேறு நிறைந்த வனப்பகுதிக்குள் சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தை அவர்கள் கடந்தபோது, குறித்த பெண்ணிற்கு பிரசவ வலி அதிகமானது.

இதன் காரணமாக தொட்டில் தரையில் இறக்கப்பட்டு, மூன்று பெண்கள் சுற்றி நின்று அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர்.

குழந்தை பிறந்ததும், இரண்டு பெண்கள் குழந்தையின் தொப்புள் கொடியை பிளேடால் அறுத்து எடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கிராமவாசிகள் கூறுகையில், ‘மருத்துவ வசதிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. இதுகுறித்து பலமுறை பேசியும் அதிகாரிகள் எந்த வித உதவியும் செய்யவில்லை’ என தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers