அம்மாவாக நினைத்துக் கொள்ளுங்கள்! விஜயிடம் நெகிழ்ந்த லதா ரஜினிகாந்த்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குழந்தைகளை கொலை செய்த அபிராமியின் கணவர் விஜயை லதா ரஜினிகாந்த் அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் குழந்தைகளை கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை இழந்து நிற்கும், அபிராமியின் கணவர் விஜயை நடிகர் ரஜினிகாந்த் அழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின் ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளராக விஜய் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் லதா ரஜினிகாந்த் விஜயை போயஸ் தோட்ட இல்லத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அவர் என்னை அம்மாவாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்