மகனையே பால் பாக்கெட் வாங்கி வரசொல்லி விஷம் கலந்து கொடுத்த அபிராமி: திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

அபிராமியால் கொல்லப்பட்ட அவரின் மகன் அஜய்யிடம், அபிராமி பால் பாக்கெட் வாங்க சொன்னது தெரியவந்துள்ளது.

பெற்ற பிள்ளைகளை இரக்கமின்றி கொலை செய்த அபிராமி விடயத்தில் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அபிராமியின் நெருங்கிய தோழி அவர் செய்த செயல் குறித்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், சுந்தரத்தின் நட்பு கிடைத்தவுடன் தெருவில் அனைவரிடமும் மனம் விட்டு, ஜாலியாக பேசி வந்த அபிராமி திடீரென அனைவரது நட்பையும் தவிர்த்தார்.

சம்பவம் நடைபெற்ற அன்று சில மணி நேரங்களுக்கு முன்பு அபிராமியால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட தனது மகன் அஜய்யை அனுப்பி பால் பாக்கெட் வாங்கி வரச்செய்து, அந்த பாலிலேயே விஷத்தை கலந்து வைத்து அவர்களை கொன்றார் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்