ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மொத்தம் எத்தனை பெயர்கள்? அவரது உண்மையான பெயர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு மொத்தம் நான்கு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 1991 ஜூன் மாதம் 14-ஆம் தேதி முருகன் கைது செய்யப்பட்டார்.

1991 பிப்ரவரியில் நளினியுடனான முதல் சந்திப்பில், முருகனுக்கு காதல் மலர, அதே ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

முருகன் என்பருக்கு அவரது பெற்றோர் வைத்த பெயர் ஸ்ரீஹரன். 1987-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்த முருகனுக்கு, இந்து என்று பெயர் சூட்டப்பட்டது.

1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடல்வழியாக சென்னைக்கு வந்தார். சென்னைக்கு வந்தவுடன், 'தாஸ்’ என்று தனக்குதானே பெயர் சூட்டிக்கொண்டார்.

சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் இவர் தனது மனைவி நளினியுடன் கைது செய்யப்பட்டார். கைதான சில நாட்களுக்கு பிறகு மொட்டைத் தலை’ முருகன் என்று பெயர் வைத்தார்கள்.

தற்போது வரை, இவர் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்