70 வயதான கணவருடன் வாழ பிடிக்காத 36 வயது மனைவி! கொலையில் முடிந்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருவள்ளூர் மாவட்டத்தில் வயதில் மூத்த கணவர் ஒத்துவராத காரணத்தால் அவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

70 வயதான சாகுல் அமீது என்பவரின் மூன்றாவது மனைவி ஜபருனிசா. இவரது வயது 36. இந்நிலையில், சாகுல் அமீது திடீரென இறந்துவிட்டார். இறுதி அஞ்சலி செய்யப்பட்டபோது இவரது உடலில் காயங்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த உறவினர்கள் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது மனைவியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.

விசாரணையில் கணவர் கொலை செய்யப்பட்டதை அவரது மனைவி ஜபருனிசா ஒப்புக்கொண்டார்.

விசாரணையில், கணவருக்கு 76 வயது, வயதான கணவர் என்பது எனக்கும் அவருக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது.

இந்நிலையில் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் தனது அக்காள் கணவர் உசேனுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் சாகுல் அமீதுக்கு தெரியவர, அவர் கண்டித்துள்ளார்.

சாகுல் சமீது கண்டிப்பால் ஜபருனிசாவால், உசேனை சந்திக்க முடியவில்லை, இதனால் கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, தனது கணவரை ஜபருனிசா கணவரை பிடித்துக்கொள்ள உசேன் கம்பியால் சாகுலை தாக்கியுள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

தற்போது, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்