அன்று கோடிகளை குவித்த இயக்குநர்! இன்று கோயிலில் பிச்சை எடுக்கும் அவலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1491Shares
1491Shares
lankasrimarket.com

தமிழ் சினிமாவில் இயக்குநர் செந்தில்நாதன் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.

பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ராஜாக்கள், இளவரசன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் செந்தில்நாதன். இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய பூந்தோட்ட காவல்காரன் வெள்ளிவிழா கொண்டாடியது.

வெற்றிப்படங்கள் காரணமாக கோடிகளை குவித்து தயாரிப்பாளர்களால் கொண்டாடப்பட்டார். இந்நிலையில்தான் இவரது வாழ்வில் விதி விளையாடியது. 2009 ஆம் ஆண்டு உன்னை நான் என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். ஆனால் படம் விற்பனையாகவில்லை. கடன் வாங்கிய பணம் வட்டி மேல் வட்டி வந்து அதனை கட்ட முடியாமல் வறுமைக்கு ஆளானார்.

ஒரு கட்டத்தில் பணம் தேவை என்பதற்காக, சின்னத்திரையில் நடிக்க வந்தார். திடீரென அந்த வாய்ப்பும் பறிபோனதால் இடிந்துபோனார்.

உலகமே இருண்டு திக்குதிசையின்றி தவித்த இவர், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் பிச்சை எடுத்துள்ளார்.

இந்த தகவலை தனது நண்பர் விடியல் ராஜிடம் போனில் தெரிவித்து அழுதுள்ளார், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேன், நான் சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதனால், இவரது குடும்பத்தினர் காஞ்சிபுரத்தில் இவரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்