43 வயதில் வந்த திருமண ஆசை! ஓடிப்போன மணமகள்... நாளை நடக்கிறது எம்எல்ஏ திருமணம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
971Shares
971Shares
lankasrimarket.com

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் இவரை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததையடுத்து தற்போது வேறு ஒரு மணப்பெண் கிடைத்துவிட்டதால் நாளை குறித்த நாளில் திருமணம் நடைபெறவிருக்கிறது.

எஸ்.ஈஸ்வரனுக்கு, கடத்தூரைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் ஆர்.சந்தியா என்பவருக்கும் நிச்சயம் முடிந்து நாளை 12 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்தது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இவர்கள் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், இந்த திருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடினார்.

இந்நிலையில், மணமகள் சந்தியா கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் கூறியதாவது, எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள்.

எனக்கும் நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் 23 வயது வித்தியாசம் உள்ளது. அவருக்கு வயது 43. எனது வயது 23.

என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நீதிபதி பாரதி பிரபா, சந்தியாவிடம், நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என கேட்டபோது, நான் பெற்றோரிடமே செல்கிறேன் என சந்தியா கூறியுள்ளார்.

இதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

தன்னை வெறுத்து ஒரு பெண் சென்றுவிட்டதால், கல்யாணத்துக்கு நாள் குறித்த அதே முகூர்த்தத்தில் வேறு ஒரு பெண்ணை மணக்க இருக்கிறார் எம்.எல்.ஏ. சத்தியமங்கலத்தில் உடனடியாக வேறு ஒரு பெண்ணை பார்த்து பேசி முடித்துவிட்டனர்.

நாளை இந்த திருமணம் முதல்வர் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்