43 வயதில் திருமண ஆசை! திரும்பவும் சோதனை... இன்று நடக்கவிருந்த எம்.எல்.ஏ திருமணம் மீண்டும் நிறுத்தம்

Report Print Raju Raju in இந்தியா
316Shares
316Shares
lankasrimarket.com

பவானிசாகர், எம்.எல்.ஏ ஈஸ்வர திருமணம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஈஸ்வரன் (43).

இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று திருமணம் நடப்பதாகவும், முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்வதாகவும் இருந்தது.

ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண்ணான சந்தியா திடீரென மாயமானதால் திருமண விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயினும், அதே திகதியில் எம்.எல்.ஏ திருமணத்தை நடத்த அ.தி.மு.கவினர் தரப்பில், தீவிர பெண் வேட்டை நடந்தது.

இதில் வேறு பெண் ஈஸ்வரனுக்கு கிடைத்துவிட்டதாகவும் இன்று பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஈஸ்வரன் தரப்பினர் தற்போது கூறுகையில், இன்று நடக்கவிருந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்