பிரியாணி அபிராமியை விளாசிய பிரபல இயக்குநர்

இந்தியா
Topics :

அபிராமி என்கிற பெண் செய்த கொடூர செயல் மன்னிக்க முடியாத ஒன்று என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

விஜய்யை அபிராமி காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுவது ஒரு சம்பவமாக பார்க்கப்படுகிறதே தவிர அந்த காதலில் ஆழம் இல்லை. காதல் என்பது ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான்.

தான் காதலித்த ஒருவரை விட்டு பிரியாணிக் கடையில் ஏற்பட்ட அந்த தவறான நட்பு ஏற்றுக்கொள்ள முடியாதது. தனது கணவர் விஜய்யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தால் அவரை விட்டு பிரிந்து சுந்தரத்துடன் சென்றிருக்க அபிராமிக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், கணவருடன் வாழ்ந்துகொண்டே சுந்தரத்தின் இருக்கும் மோகத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளையும் கொன்றிருப்பதால் அவருக்கு மனநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது.

அபிராமி மற்றும் சுந்தரம் ஆகிய இருவரும் செய்தது குற்றம் என உறுதியாகும்பட்சத்தில் அவர்களுக்கு கண்டிப்பாக மன்னிப்பு வழங்காமல் தண்டனை வழங்க வேண்டும்.

நம் சமூகத்தில் தற்போதும் அதிகமான அபிராமிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், உங்கள் குடும்பத்தாருடன் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், நீங்கள் விலகிசெல்வற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.

அதற்காக, உங்கள் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கொலை செய்வது கொடூரத்தின் உச்சகட்டம். இந்த கொடூர செயலை யாரும் செய்யாதீர்கள். மனித உயிர் விலைமதிக்க முடியாதது என்று கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.