இளம் பெண் மீது கொண்ட ஆசையால் மருத்துவர் செய்த வெறிச் செயல்! வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காணாமல் போன நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தின் பெர்காம்பூர் பகுதியைச் சேர்ந்த Bishnu Prasad Gouda என்ற நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் 18-ஆம் திகதி காணமல் போயுள்ளார்.

இதனால் அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது திடீரென்று போனில் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்ட நபர் Bishnu Prasad Gouda-வை Goilundi பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் Hrushikesh Tripathy கொலை செய்து புதைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக பொலிசாரிடம் கூறியுள்ளனர். அதன் பின் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதில் Bishnu Prasad Gouda டாக்டர் Hrushikesh Tripathy-யின் கிளினிக்கில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்க்கும் நர்சுக்கும் Bishnu Prasad Gouda தொடர்பு இருந்துள்ளது.

அதே சமயம் அந்த நர்சின் மீது Hrushikesh Tripathy-க்கும் ஆசை இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திரிபதி Bishnu Prasad Gouda-வை பலமுறை எச்சரித்துள்ளார்.

இதையடுத்து Bishnu Prasad Gouda கிளினிக்கை விட்டு நின்று, தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இருப்பினும் நர்சுடன் கொண்ட பழக்கத்தை அவர் விடவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் திரிபதி கடந்த 18-ஆம் திகதி வேலைக்கு சென்ற Bishnu Prasad Gouda-வை கொலை செய்துவிட்டு, அருகிலிருக்கும் Badagumula கிராமத்தில் அவரின் உடலை துண்டாக வெட்டி, எரித்து புதைத்துவிட்டு, இதை மறைப்பதற்காக அதன் மேல் கழிப்பறை கட்டியுள்ளார்.

பொலிசார் கொலையாளியான திரிபதியை தேடி வருகின்றனர். தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரின் மனைவி மற்றும் நர்சிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...