ராஜீவ்காந்தி வழக்கில் 7 தமிழர்களின் விடுதலை திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுகிறதா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், தாமதப்படுத்தும் நோக்கத்துடனே மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீறும் வகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் மூலம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை திட்டமிட்டு தாமதப்படுத்துவதாகவும் புகார் கூறியுள்ளது. தமிழக அமைச்சரவை அனுப்பி வைத்துள்ள தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என சட்ட நிபுணர்கள் கூறியிருந்தனர். ஆனால் இதனை பொய்யாக்கும் வகையில் தீர்மானத்தை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு வேளை 7 பேர் விடுதலை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தாலும் மீண்டும் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றினால் அதனை ஆளுநர் ஏற்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers