சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்ட கூலித்தொழிலாளிக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கிடைத்த கோடிப்பரிசு மழை

Report Print Deepthi Deepthi in இந்தியா
549Shares
549Shares
lankasrimarket.com

பஞ்சாப் மாநிலத்தில் கூலித்தொழிலாளி ஒருவருக்கு கடன் வாங்கி வாங்கப்பட்ட லாட்டரி டிக்கெட்டில் 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மனோஜ் குமார்- ராஜ்கவுர் தம்பதியினர் செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.

ஒரு செங்கலுக்கு அவர்களுக்கு 50 பைசா கூலி வழங்கப்படும். நாள் முழுவதும் கடினமாக உழைத்தாலும் அதிகபட்சமாக 250 ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தின் மூலம் 3 பெண் பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளனர்.

ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்த மனோஜ்குமாரை தேடி அதிர்ஷ்டம் வந்துள்ளது. வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் மனோஜ் குமாருக்கு கிடையாது.

ராக்கி பம்பர் லாட்டரி பற்றி கேள்விப்பட்டதும் திடீரென தன்னுடன் வேலை செய்யும் இன்னொரு நண்பரிடம் இருந்து ரூ.200 கடன் வாங்கி ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்.

மனோஜ் வாங்கி லாட்டரிக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்து மனோஜ்குமார் வாங்கிய லாட்டரி சீட்டு எண்ணும் சரியாக இருக்கவே ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்