டெல்லியை உலுக்கிய 11 பேர் மரணம்! பிரேத பரிசோதனை முடிவில் வெளியான முக்கிய தகவல்

Report Print Kabilan in இந்தியா
155Shares
155Shares
lankasrimarket.com

இந்தியாவின் டெல்லி நகரில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் நீடித்து வந்த குழப்பத்தில் பொலிசார் இறுதி முடிவினை எட்டியுள்ளனர்.

டெல்லியில் உள்ள புராரி பகுதியில் கடந்த ஜூலை மாதம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர்கள் அனைவரும் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். இதனால் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் பொலிசாருக்கு எழுந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த வீட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு துண்டுக் காகிதங்கள் மற்றும் டைரிகள் கிடைத்தன. அவற்றில் சொர்க்கத்தை அடைய தற்கொலை தான் வழி என எழுதப்பட்டிருந்தது.

இதனால் பொலிசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. மேலும் 10 பேரின் உடல்கள் தூக்கில் தொங்கியவாறும், நாராயண் தேவி என்பவரது உடல் மட்டும் தரையில் கிடந்தவாறும் மீட்கப்பட்டது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் எண்ணிய நிலையில், பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை நேற்று பொலிசாருக்கு கிடைத்தது.

அதில் நாராயண் தேவி உட்பட அனைவருமே தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்கள் என்றும், நாராயண் தேவியின் கழுத்தில் ஒயர் மாட்டப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, 11 பேரும் தூக்கில் தொங்கிதான் இறந்துள்ளனர் என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ சார்பில் நடத்தப்பட்ட உடற்கூராய்வு அடிப்படையிலும், இது தற்கொலை தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்