என்னை ரொம்ப துன்புறுத்துறாங்க: தற்கொலை செய்த இளம் மனைவியின் உருக்கமான கடிதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தின் சேலத்தில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவரை கைது செய்துள்ள பொலிசார் மேலும் நால்வரை தேடி வருகின்றனர்.

எஸ்பி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி கடந்த திங்களன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில், புவனேஸ்வரின் தாய் வீட்டில் புவனேஸ்வரி கைப்பட எழுதிய கடிதம் கிடைத்தது.

அதில் கணவரும், அவரது குடும்பத்தினரும் அடித்து துன்புறுத்தியதாக புவனேஸ்வரி குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கணவர் கவுதமனை பொலிசார் கைது செய்த நிலையில் தலைமறைவான மாமியார், மாமனார், கணவரின் சகோதரிகள் இருவரை தேடி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers