ராஜநாக விஷத்தை நாக்கில் கடிக்க வைத்து போதையேற்றிய இளைஞர்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

ராஜஸ்தானை சேர்ந்த பணக்கார இளைஞர்கள் இரண்டு பேர் ராஜநாகத்தின் விஷத்தை போதைக்காக பயன்படுத்திய தகவல் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ நாகம் ஒருமுறை கடித்தால், 20 பேரைக் கொல்லக்கூடிய அளவுக்கு விஷத்தன்மை வாய்ந்த நஞ்சு வெளியாகும்.

அத்தகைய நஞ்சை கக்கக்கூடிய ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.

பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளனர். அதாவது ராஜ நாகத்தைப் பிடித்து அவர்களின் நாக்கில் கடிக்க வைத்து, அந்த நஞ்சை உடலில் ஏற்றிக்கொள்வார்களாம்.

ராஜ நாகத்தின் நஞ்சு எந்தப் போதைப் பொருளாலும் கொடுக்க முடியாத மயக்கத்தைக் கொடுப்பதாக அந்த இளைஞர்கள் ஆராய்ச்சியாளர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்களின் வாக்குமூலம் ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,

இந்த இரண்டு இளைஞர்களும் தற்போது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்