அம்மாவுடன் இருப்பதுபோல உணர்வதால் தான் வீட்டில் தங்கினேன்: நடிகர் விஜயகுமார் மகள் கண்ணீர்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை காவல் ஆணையரிடம் தனது தந்தையான நடிகர் விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாக அவர் மகள் வனிதா புகாரளித்துள்ளார்.

மதுரவாயிலில் அமைந்துள்ள நடிகர் விஜயகுமார் வீட்டில் தங்கியிருந்த வனிதா அங்கிருந்து வெளியேற மறுப்பதாக விஜயகுமார் பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து அங்கிருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.

தற்போது சென்னை காவல் ஆணையரிடம் விஜயகுமார் குறித்து புகார் அளித்த வனிதா செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன்.

வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார். வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

சிவில் வழக்கு நிலுவையில் உள்ளபோது பொலிஸ் வழக்கு பதிவு செய்தது தவறு.

நான் தயாரிக்கும் "டாடி" என்ற படத்திற்கு எனது தந்தை விஜயகுமார் இடையூறு செய்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers