எனக்கும், விஜயகுமாரின் மகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நடன இயக்குநர் ராபர்ட் பதில்

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகர் விஜயகுமாரின் மகளுக்கு, எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடன இயக்குநர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆலப்பாக்கத்தில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா தொடர்பாக அவருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தற்போது நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டருடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானதால், மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாக, ராபர்ட் தெரிவித்துள்ளார்.

நானும் நடிகை வனிதாவும் இணைந்து ஒரு படத்தை தயாரித்ததாகவும், இதுதவிர வேறு எந்த தொடர்பும் எங்கள் இருவருக்கும் இல்லை என கூறியுள்ளார்.

ஏற்கனவே இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்