இளம்பெண்ணை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கிராம மக்கள்: 19 பேர் கைது

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் போலி மது விற்பனை மேற்கொண்டதாக கூறி இளம் பெண்ணை கொடூரமாக தாக்கி கிராம மக்கள் நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 19 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று குடியிருப்பு ஒன்றில் புகுந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட கும்பல் ஒன்று அங்கிருந்த இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளது.

பின்னர் மர்ம உறுப்பில் மிளகாய் பொடி தூவியுள்ளனர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்கான தண்டனை இது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறித்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் கவனம் பெற்றதுடன் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி தம்மை ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கியதாகவும், சித்திரவதைக்கு உட்படுத்தியதாகவும் கூறி அப்பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே சம்பவம் தொடர்பாக 19 பேரை கைது செய்துள்ளதாகவும், முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்