நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சடலமாக கிடந்த கணவன்: அதிர்ச்சி பின்னணி

Report Print Vijay Amburore in இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் Zira பகுதியை சேர்ந்தவர் ராஜ்ப்ரீத் சிங் (42). இவருடைய மனைவி மஞ்சித் கவுர் (45) மோகா பாலியல் ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 2013-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மாநிலம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த மோகா பாலியல் ஊழல் வழக்கில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியமான அரசியல்வாதிகள் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்ப்ரீத் சிங் மற்றும் 8 மாத கர்ப்பிணியான அவருடைய மனைவி மஞ்சித் கவுர் வீட்டில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியுள்ளனர். குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததால், தற்போது அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஆயுதப்படையினர் உபயோகப்படுத்தும் துப்பாக்கியின் தோட்டாக்கள், இருவரின் தலைப்பகுதியிலும் ஊடுருவியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்