நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண்: ஒரு இளைஞரின் அன்றாட உணவு பட்டியல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாள் ஒன்றுக்கு மூன்று கிலோ மண் மற்றும் கற்கள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

பக்கீறாப்பா ஹுனாகுடி என்ற அந்த இளைஞர் தனது 10 வயது முதலே மண் மற்றும் கற்களை விரும்பி சாப்பிட்டு வருகிறார்.

இதனால் தனது உடலுக்கு எந்தவித கெடுதலும் இதுவரை ஏற்பட்டதில்லை என கூறும் பக்கீறாப்பா, துவக்கத்தில் சிற்றுண்டியாக மண் மற்றும் கற்களை உண்டு வந்ததாகவும் பின்னர் அது அன்றாட உணவாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய நிலையில் எவ்வித மாறுதலும் இதுவரை ஏற்பட்டதில்லை என தெரிவித்துள்ள பக்கீறாப்பா, தமது பற்களும் உடைந்ததில்லை என்கிறார்.

ஆனால் பக்கீறாப்பாவின் இந்த பழக்கத்தை நிறுத்த குடும்பத்தினர் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

கோழி உணவை விட மிகுந்த சுவை தமக்கு கற்களை சாப்பிடும்போது கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்