பேஸ்புக்கில் போலி கணக்கு... மாணவிகளை ஏமாற்றி பலாத்காரம்: இளைஞர் சிக்கியது எப்படி?

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகளை ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஏமாற்றி வந்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தின் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் முபீன்(19). வேலை ஏதும் இன்றி சுற்றித்திரிந்த இவர் பேஸ்புக்கில் போலியாக ஒரு கணக்கை தொடங்கி தனது முகத்தை மாற்றி மார்பிங் செய்து அதில் பதிவிட்டுள்ளார்.

மட்டுமின்றி தான் மாடலாக பணிபுரிந்து வருவதாகவும், ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் இசை நிகழ்ச்சி நடத்தும் ‘டிஜே’ வாக பணிபுரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரது மார்பிங் புகைப்படங்களை பார்த்து மயங்கிய பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமானோர் நண்பர்களாயினர்.

பேஸ்புக்கில் இவருக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் நண்பர்கள் உள்ளனர். இந்தநிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பள்ளி மாணவியை பயாஸ் முபீன் கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கோழிக்கோடு பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டது.

பொலிசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்முபீனை கைது செய்தனர். விசாரணையில், இவர் பல பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மட்டுமின்றி தாம் பெற்றோர் இழந்தவன் எனக் கூறி வசதி படைத்த பெண்களிடம் இதுந்து பண மோசடியும் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்