நடிகர் அருண்விஜயை நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என கேட்ட வனிதா! கேவலமானவன் என ஆவேசம்

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகையும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா அருண் விஜயை நீயெல்லாம் ஒரு ஆம்பளையா என்று ஆதங்கமாக கேட்டுள்ளார்.

நடிகரான விஜயகுமாருக்கு சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் மிகப் பெரிய பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா சினிமா படப்பிடிப்பிற்காகா அவ்வப்போது வாடகைக்கு விடப்படும்.

அந்த வகையில் தனது மகள் எடுக்கும் படத்திற்கு விஜயகுமார் அந்த பங்களாவை வாடகைக்கு கொடுத்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு முடிந்தும், வனிதா இன்னும் பங்களாவை காலி செய்யாமல் இருப்பதாக கூறி விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டதால், வனிதா பங்களாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வனிதா, அம்மா உயிருடன் இருந்த வரை அப்பா விஜயகுமார் என் மீது பாசமாக இருந்தார்.

அவர் இறந்த பின்பு அவருடையே போக்கே மாறிவிட்டது. மகனான அருண்விஜயின் பேச்சைக் கேட்டு ஆடுவதாக கூறியுள்ளார்.

மேலும் அருண்விஜயை கூப்பிட்டு கேளுங்க, நான் படத்தில் வில்லனாக நடிக்க வரவில்லை, நல்லவனாகாவே நடிக்க வந்துள்ளேன் என்று கூறுகிறாரே, ஆனால் நிஜவாழ்க்கையில் வில்லனை விட மிகவும் கேவலமாக இருக்கிறாயே, சம்பவதினத்தின் போது பங்களாவிற்கு வெளியில் இருக்கும் வண்டியில் தான் அனைவரும் உட்கார்ந்து இருக்கிறாங்க, அருண்விஜயை ஒரு ஆம்பளையா என்று தான் நான் கேட்பேன்.

ஒரு பெண்ணை ஆட்களை வைத்து அடிப்பதோ, பொலிசை வைத்து அடிப்பவன் ஆம்பளையே கிடையாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்