நான் அதை செய்யவில்லை என்று கதறிய சிறுவனை அடித்தே கொன்ற கிராம மக்கள்! நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருட்டு சம்பவம் ஒன்றிற்கு சிறுவன் தான் காரணம் என்று கூறி, கிராம மக்களே அவனை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் உள்ள வெள்ளியணை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லாலிகவுண்டனூர் பகுதியில் வசித்து வருபவர் இளஞ்சியம்.

இவருக்கு பாலசுப்ரமணியன்(15) என்ற மகன் நந்தினி(5) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாலசுப்ரமணியன் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியில், அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.

இதனால் ஊர் சுற்றும் பாலசுப்ரமணியன் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க கூடும் என்று பொதுமக்கள் சந்தேகித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று இரவு பாலசுப்ரமணியன் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் மற்றொரு வீட்டில் செல்போனும் திருட்டு போயிருந்தது. இப்படி பக்கத்து பக்கத்து வீடுகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்ததால்,வழக்கம்போல் அந்த வீடுகளுக்கு அருகில் உள்ள பாலசுப்ரமணியன் தான் அந்த திருட்டுச் சம்வங்களை அரங்கேற்றியிருக்க முடியும் என்று கிராமமக்கள் நினைத்துள்ளனர்.

அதனால்,பாலசுப்ரமணியன் மீது சந்தேகப்பட்ட அவர்கள் சிறுவனை அவனது வீட்டில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

நான் திருடவில்லை என்று கூறிய போதும், அவர்கள் நீ தான் திருடி இருப்பாய் என்று கூறி சரமாரியாக அடித்துள்ளனர்.

இதன் காரணமாக பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், அப்பகுதிக்கு விரைந்த பொலிசார் இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இப்படி 15 வயது சிறுவனை திருட்டு சம்பவங்களில் சந்தேகப்பட்டு கிராம மக்களே அடித்து கொன்றதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்