10-ஆம் வகுப்பு மாணவனுடன் குடும்பம் நடத்திய 40 வயது ஆசிரியை

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பத்தாம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் கடத்தி குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பெரோனா(40). இவர் ஆலப்புழா அருகே சேர்த்தலா முகம்மா பகுதியில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் ஆசியராக பணியாற்றி வந்துள்ளார்.

திருமணமான இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் பெரோனாவுக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மாணவன் இயல்பாகவே அனைவரிடமும் கலகலவென்று பேசுவான், இதனால் பெரோனாவுக்கு மாணவனை மிகவும் பிடித்துள்ளது. மாணவனிடம் தொடர்ந்து பேச வேண்டும் என்பதால், செல்போனும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 23-ஆம் திகதி மாணவனை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் பெரோனாவும் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

மாணவனை கடத்தி வந்த ஆசிரியை சென்னை சூளைமேட்டில் ஒரு அறை எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். பெரோனாவை கைது செய்த பொலிசார், மாணவனை பத்திரமாக மீட்டனர். பெரோனாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்